STRAINED CONJUGAL RELATION – HUSBAND AND WIFE DIVORCED-GIRL REMARRIED
தார வியோகம் -விவாஹ ரத்து- மறுமணம் செய்த பெண்ணின் ஜாதகம்.
லக்னம்,ராசி இரண்டும் மிதுனம்.குரு தசை ராகு புக்தியில் திருமணம் நடந்தது.(2010) . ராசி மற்றும் லக்கினத்திற்கு 6ம் இடம் 8ம் இடம் அதிபர்கள் சனியும் செவ்வாயும் 8ம் இடமாகிய மாங்கல்ய ஸ்தானத்தில் மறைவு. மேலும் களத்திர காரகனுக்கு 12ல் மறைவு.தாரதோஷம் ஏற்பட்டது.சனி தசை , ஸ்வய புக்தியில் (2011) தம்பதிக்குள் மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. அதே தசா புக்தியில் ( 2103) விவாஹரத்து ( (விவாஹ முறிவு) ஏற்பட்டது. என்னிடம் இவர் ஜோதிட ஆலோசனைக்கு வந்தபோது நான் இவரது ஜாதகத்தை நன்கு ஆய்வு செய்து இவருக்கு பெயர் மாற்றம் செய்தேன். இவரது ஜாதகத்திற்கான அதிர்ஷ்ட கல்லும் அணியச் சொல்லி, மறு மணம் நடைபெறுவதற்கான மந்திரமும் உபதேசம் செய்தேன்.கடவுளின் திருவருளால், சனி தசை புதன் புக்தி குரு அந்தரத்தில் ( 2016 ஏப்ரலில் ) நல்ல ஒரு சம்பந்தத்தில் மறுமணம் நடந்துள்ளது. குரு களத்திராதிபதியாகி குருவே உப நட்சத்திர அதிபனாகவும் ஆகிறர். புதன் கேதுவின் நட்சத்திரதில் உள்ளார்.இவருக்கு உப நட்சத்திர அதிபனாக சுக்கிரன் உள்ளார். சுக்கிரன் பஞ்சமாதிபதியாகவும் , களத்திர ஸ்தானத்திற்கு லாபாதிபதியாகவும் ஆகி லக்கினத்திற்கு 9 ல் அதவது பாக்கியஸ்தானத்தில் உள்ளார். எனவே இழந்த திருமண வாழ்க்கை மீண்டும் உண்டாயிற்று.ஒரு பெண்ணிற்கு பாக்கியம் என்பது அவளது மண வாழ்க்கை தானெ ? எனவே மறுமணம் சாத்தியமானது.
(contents If not properly displayed please down load web-Tamil-latha font from http://www.fonts2u.com/latha.font )
©copy right- divineastro 2016-2017