HOROSCOPE 2

STRAINED CONJUGAL RELATION – HUSBAND AND WIFE SEPARATED AND RE-UNITED
தார வியோகம் ( பிரிவு ) ஏற்பட்டு பின்னர் கணவனுடன்  மீண்டும் ஒன்று சேர்ந்த பெண்ணின் ஜாதகம்.

ha-mahamanju
மீன லக்கினம்.சிம்ம ராசி. சந்திர தசை சந்திர புக்தியில் ( ஏப்ரல்  2014 ) கணவன் மனைவி இவர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிவு ஏற்பட்டது. விவாஹ ரத்து நோட்டீசும் பரஸ்பரம் அனுப்பப்பட்டது.சந்திரன் 6ல் அதாவது களத்திர ஸ்தானத்திற்கு 12 ல் மறைவு பெற்று உள்ளார்.. 6ம் இடம் என்பதே மனஸ்தாபம் சண்டை சச்சரவு ,நீதி மன்ற வழக்குகளை குறிப்பது. சந்திரனுக்கு கேது நட்சத்திர அதிபதி. சனி ( 12 ம் வீட்டு அதிபதி) உப நட்சத்திர அதிபதியானார். மேலும்  கேது 7ல் ( களத்திர ஸ்தானத்தில் ) உள்ளார்.எனவே பிரிவு , கோர்ட் கேஸ் என்றாயிற்று.
சந்திர தசை ராகு புக்தியில் .( நவம்பர் 2016 ல்) ஒன்று சேர்ந்தனர். காரணம் ராகு , புதனுடைய நட்சத்திரத்தில் இருந்து அவருக்கு குரு உப நட்சத்திர அதிபதியானார். அதாவது புதன் சுக , களத்திராதிபதி , குரு லக்கினாதிபதி. இந்த இருவரும் பரஸ்பர கேந்திரத்தில் உள்ளனர்.எனவே தம்பதிகள் ஒன்று சேர்ந்தனர்.இவர் ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் இருப்பதால் வழக்கு நடந்தாலும் இவரே வெற்றி பெறுவார். அதில் சந்தேகம் இல்லை.இவருக்கு இதுபற்றி 11 மாதத்திற்கு முன்பே அறிவுறுத்தி அவர் தன் கணவருடன் ஒன்று சேர்வதற்கான மந்திரங்களும் பரிகாரங்களும் உபதேசித்தேன். இவரும் நம்பிக்கையுடன் அதை சரியானபடி கடைப்பிடித்து  வந்தார். கடவுள் அருளால் இருவரும் நல்லபடியாக ஒன்று சேர்ந்துவிட்டனர்.

(contents If not properly displayed please down load web-Tamil-latha font  from http://www.fonts2u.com/latha.font )
©copy right- divineastro 2016-2017