செல்வத்தையும் சிறப்பையும் தரும் மஹா லக்ஷ்மி உபாசனை
அஷ்டலக்ஷ்மி அருள் பெற ஒரு அருமையான ஸ்தோத்திரம்
முதலில் எல்லா வளங்களும் பெற மஹாலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்
அடுத்து படிப்பிற்கு வித்யா லக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்
அடுத்து புத்திர பாக்கியத்திற்கு ஸந்தான லக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அடுத்து குடும்ப ஒற்றுமைக்கு காருண்யலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அடுத்து வளமான வாழ்விற்கு சௌபாக்ய லக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அடுத்து நிறைந்த செல்வத்திற்கு தனலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அடுத்து எதிரிகளை வெல்ல வீரலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அடுத்து அறுசுவை உணவிற்கு தான்யலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன் . நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்
KUBHERA WORSHIP
For abundant wealth :The god of Yakshas is Lord Kubera according to Hindu mythology and he is always remembered with the goddess of fortune, Lakshmi devi who chants Kuber Mantra and blesses the worshiper with money and prosperity by drawing new avenues and sources of income and wealth. Mantra of Kubera helps to increase the flow of funds and the ability to accumulate wealth. Kubera Mantra is as follows:
Kubera Mantra
“Om Yakshyaya Kuberaya Vaishravanaaya Dhanadhanyadi Padayeh
Dhana-Dhanya Samridhim Me Dehi Dapaya Swaha”
Meaning: O Lord Kubera, the lord of yakshas, please bless us all with wealth and prosperity. If Kubera is worshipped along with Goddess Lakshmi you will never fall short of money and material comforts. The special pooja of Kubera is performed on Navaratri and on Dhana triyodasi and on Deepawali , praying for wealth and prosperity . Kubera Gayathri
Om Yaksha Rajaya Vidhmaya Alikadeesaya Deemahe Tanno Kubera Prechodayath.
It is emphasized in tantrik texts that chanting this mantras for 108 times daily with the yantra given above will bless you with abundant Wealth and prosperity. One may also keep the image of Kubhera with his Yantra in the cash box,valet or purse for better results.
(contents If not properly displayed please down load web-Tamil-latha font from http://www.fonts2u.com/latha.font )
divineastro,in ©-2016-2017