ராமேஸ்வரம்-காசி யாத்திரை விபரம் மற்றும் பித்ரு தோஷம்,சர்ப்ப தோஷம்,புத்திர தோஷம் இவற்றிற்காக ராமேஸ்வரத்தில் பரிஹாரம்
தீர்த்த யாத்திரைக்கு ராமேஸ்வரமும் வாரணாசியும் வேண்டுமா?
அவசியம் வேண்டும்….இந்த இரண்டு புனித ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடும் விதிமுறைகள் பற்றி முதலில் பார்ப்போம்.பின்பு அங்கு செய்யவேண்டிய பரிஹாரங்கள் மற்றும் சடங்குகள் பற்றி பார்ப்போம்.
காசி ஏன் முக்கியமானது?
“காசீனாம் மரண முக்தி ” என்ற வாசகப்படி 7 முக்தி க்ஷேத்திரங்களில் காசியும் ஒன்று. காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும்,தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் இங்கு கங்கை நதியில்
கலக்கின்றதால் “வாரணாசி” என்னும் சிறப்புப் பெயர் பெற்றது.
சிவபெருமான் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்பது ஐதீகம்.ஒவ்வொரு இந்துவிற்கும் நாம் வாழ்நாளில் ஒரு தடவையாவது காசி யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது இல்லை. காசியுடன் ராமேஸ்வரமும் சென்று வழிபட்டால் தான் அதிக பலன் கிடைக்கும். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை முறைப்படி மேற்கொள்வது எப்படி என்பதை இப்போது காண்போம்:
காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள ‘அக்னி தீர்த்தம் ‘ கடலில் நீராடி ஈர உடையுடன் மூன்று தடவை கடலில் மூழ்கி எழ வேண்டும். இந்த அக்னிதீர்த்ததின் ( Bay of Bengal) வழியாகத்தான் ஶ்ரீ ராமபிரான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். ராமேஸ்வரத்தில் தான் பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி ஆகியுள்ளார். அக்னி தீர்த்தத்தில் ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுத்து முறையே சேது மாதவர் , பிந்து மாதவர் மற்றும் வேணுமாதவர் என்று 3 லிங்கங்களாகப் பிடித்து கடற்கரையில் வைத்து மூன்று லிங்கத்திற்கும் உபசார பூஜைகள் செய்து ‘ ஓம் சிவாய நமஹ ‘ என்ற பஞ்சாக்ஷர பக்தியுடன் ஜெபித்து பிரயாணம் நன்கு அமைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் முதலில் பிடித்த சேது மாதவ லிங்கத்தை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்து கொண்டு மற்ற இரு லிங்கங்களையும் அக்னி தீர்த்த கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் அருள் மிகு ராமநாதஸ்வாமி திருக்கோவிலுக்குள் உள்ள கோடிதீர்த்தம் முதலிய 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு கோடி தீர்த்தத்தை (தேவஸ்தான கடைகளில் ப்ளாஸ்டிக் கேனில் கிடைக்கும் ) வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.இனி ஸ்ரீ ராமநாதர் மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதிக்குச் சென்று அர்ச்சனை , ஆராதனைசெய்து வழிபட்டு பின் மற்ற சன்னிதிகளுக்கும் சென்று சேவித்தபின் காசிக்கு புறப்பட வேண்டும். அப்படி உடனே காசிக்கு செல்ல முடியாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும்,கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்த்தையும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு ராமேஸ்வரத்திலிருந்து எடுத்துவந்த ‘சேது மாதவ லிங்கத்தை ‘ திரிவேணி சங்கமத்தில் விட வேண்டும். இங்கு ‘ வேனி தானமும் ‘ செய்து கொள்ளளாம். பின் அங்கிருந்து ஒரு கேனில் திரிவேணி சங்கம தீர்த்தம் எடுத்து கொண்டு காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் நீங்களே அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு குடும்பத்தில் இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் (ச்ரார்த்தம்) செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண நல்லாசிகள் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் கிடைக்கும்.அச்சய வடத்தின் கீழ் தங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு இலை , காய் , பழம் வாழ்நாளில் விட்டு விடுவதாக உறுதி ஏற்க வேண்டும்.நிஜமாகச் சொல்வதென்றால் மண்,பெண்,பொன்னாசையை விட வேண்டும். பின்பு ஹரித்வார் சென்று வழிபட்டு சுத்தமான கங்கை நீர் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் மீண்டும் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் ஒரு பட்சத்திற்குள்ளாவது ராமேஸ்வரம் வர வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை மற்றும் கங்கை நீரை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தம் மற்றும் கங்கா தீர்த்தத்தை ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதருக்கு அபிஷேகம் செய்வித்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். அங்கேயே குறைந்தது 4 அந்தணர்களுக்கு அன்ன உபசாரம் , தட்சிணை உபச்சாரம் செய்து ஆசிகள் பெற்றுக் கொள்ளவும். இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.
பயனுள்ள தொடர்பு எண்கள்: (எண்களை சரி பார்த்துக் கொள்ளவும்)
Varanasi Helplines :
Varanasi Police Control Room Number : 100, 0542-2414150,2419483
Superintendent of Police, Varanasi : 0542-2414141
Varanasi Railway Enquiry number : 131, 139, 2504131, 2504031
Varanasi Airport Number : 0542-2622081-090
Rameswaram Helplines:
Ramanathasami Temple Devastanam :East Side [inside the temple] 04573 – 221223
Devasthanam Cottages – 04573 – 221223 / 221292 –
Railway Retiring Rooms – 04573 – 221226
Town Police Station (04573) 221227
Temple Police Station (04573) 221246
பித்துரு தோஷம் என்றால் என்ன? நாகதோஷம் என்றால் என்ன?
பித்ரு தோஷம் :லக்கினத்திற்கு ராகு 1,5,7,9 ல் இருந்தால் பித்ரு தோஷம்.. 3,5,9 ல் ராகு இருந்தாலும் தோஷமென்று சில நூல்களில் காணப்படுகிறது.
5 ம் இடம் அல்லது 9 மிடத்தில் சூரியனுடன் ராகு சேர அல்லது 5, 9 ல் ராரு இருக்க பித்ரு தோஷம் என்றும் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு என்பதும் ஜோதிட வல்லுனர்கள் கூற்று.
பித்ரு தோஷம் ( curse of the forefathers ) மற்றும் சர்ப தோஷத்தால் ஏற்படும் குழந்தை இன்மை ( childlessness ), காரியத்தடைகள் ,திருமணத் தடைகளை தகுந்த பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நாக தோஷம்:(கால சர்ப்ப தோஷம் என்பது வேறு ) லக்கினத்திற்கு 7,8,2 ல் கருநாகம் என்று சொல்லப்படும் ராகு இருந்தாலும் 7ம் வீட்டோன் (களத்திர ஸ்தானாதிபதி) சுக்கிரன் (களத்திர காரகன்) இவர்கள் பலவீனமாகி ராகுவுடன் சேர்ந்தாலும் திருமணத்தடை,இரண்டு விவாகம்,தாரவியோகம் ( பிரிவு ) அல்லது கணவன் அல்லது மனைவிக்கு கண்டம் இவை ஏற்படலாம். இதற்கு ராகுஸ்தலங்கலிலும் பரிகாரம் செய்துகொள்ளலாம். புத்திர தோஷம்: இதேபோல் ராகு 5ம் இடம் , 5ம் வீட்டு அதிபதி அல்லது புத்திர காரகனாகிய குருவுடன் சம்பந்தப் பட்டு ‘குரு சண்டாள யோகம்’ ஏற்பட்டாலும் , அல்லது மேற்படி வீடு , கிரகங்களுக்கு , ராகு நட்சத்திராதிபதி அல்லது உபநட்சத்திராதிபதி ( stellar lord /sub lord/sub-sub lord) ஆனாலும் சர்ப்ப தோஷத்தால் புத்திர தோஷம் ஏற்படும். இதற்காகவும் ராமேஸ்வரத்தில் நீங்கள் சர்ப்ப சாந்தி / நாக பிரதிஸ்டை செய்து கொள்ள வேண்டும்.
இதற்கான பரிஹார பூஜைகள் , சாந்தி ஹோமங்கள் மிக நல்ல முறையில் உங்களுக்கு பூரணபலன் கிடைக்கும் வகையில் தகுந்த பண்டிதர்கள் மூலம் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்து நடத்தி தரப்படும். மேலும் இது பற்றிய முழு விபரங்களுக்கு மின்அஞ்சல் ( Email ) அல்லது அலைபேசி எண் மூலம் (கீழே உள்ள வலைத்தலத்தை click செய்யவும்) குருஜீயை அணுகவும் :
Email: divineastro@gmail.com
website: www.divineastro.in
நலம் பல பெற்று வளமுடன் நீடு வாழ்க.
(contents If not properly displayed please down load web-Tamil-latha font from http://www.fonts2u.com/latha.font )
©copy right- divineastro 2016-2017