War against Corona (Covid -19) India will win the invisible enemy…

War against Corona (Covid -19) India will succeed
What does the Astrology say…….?
கொரோனாவிற்கு எதிரான போர்.
இந்தியா வெல்லும்…
ஜோதிடம் உறுதிப்படுத்துகிறது ( 21 மார்ச் 2020)

=======================
பேரழிவு ஏற்படுத்தும் கிரகமான ப்ளூட்டோ (bulldozer of zodiac) சுமார் 500 வருடங்களில் ராசி மண்டலத்தை ஒருமுறை  சுற்றி வருவார். சனி 30 ஆண்டுகளில் சுற்றிவருவார்.ராசி மண்டலத்தில் கர்ம ஸ்தானமாக கருதப்படும் (10வது வீடான) மகரத்திற்கு 2020 ஜனவரி 12ம் தேதி ப்ளூட்டோ பிரவேசித்தார். அதே மாதம் 24ம் தேதி மகர ராசியில் ப்ளூட்டோவுடன் சனி இணைந்ததால் அமர்க்களம் அரம்பமாயிற்று. கொரோனா (Covid-19)தன் கோர  அத்தியாயத்தைத்  தொடங்கியது.ஜனவரி 30ம் தேதியன்று தான் முதல் கொரோனா கேஸ். சீன நாட்டின் வுகானில் தொடங்கிய கொரோனா உலக அளவில் 300000 கும் அதிகமான நபர்களுக்கும் ( இந்தியாவில் 236 ) மேல் நோய் பாதிப்பை ஏற்படுத்தி 10000 க்கும் அதிகமான உயிர் இழப்பு ஏற்படுத்தியது .
இந்த ப்ளூட்டோ சனி  கிரக சேர்க்கையால் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும். மக்களிடையே எதிர் மறையான எண்ணங்களும் எண்ணங்களும் தாழ்வு மணப்பாங்கும் ஏற்படும். இந்த சனி , ப்ளூட்டோ 1518ல் இதே மகர ராசியில் இணைவுற்றபோது பேரழிவும் பெரிய அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டன. கடகத்தில் 1914 ல் இணைவுற்றபோது முதல் உலகப்போர் மூண்டது. மகர ராசியில் இந்த 2 கிரகங்களின்  மோசமான இணைவின் போது , தனுர் ராசியில் குரு, கேதுவின் சேர்க்கை. கேதுவின் சேர்க்கையால் குருவிற்கு குரு சண்டாள தோஷம் ஏற்படுகிறது. கேது நோய்க்கிருமிகள் உற்பத்தியை குறிக்கிறது. பின்பு செவ்வாய் இவர்களுடன் இணைந்து கொள்வதால் தீவிரமாக நோய் பரவுவதையும் குறிக்கிறது.

இந்த செவ்வாய் ஜனவரி 22ம் தேதி மகரத்திற்கு இடம் பெயர்ந்து சனி ,புதன்,சூரியன்,ப்ளூட்டோவுடன் சேர்ந்து கொள்வதால் இந்த கால கட்டத்தில் கோரோனா நோயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

◆ஒரு ஆறுதலான விஷயம்
மார்ச் 30ல் குரு அதிசாரம் பெற்று மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.மே 16ல் வக்கிரம் பெற்று ஜூன் 26ம் தேதி மறுபடியும் தனுர் ராசிக்கு ப்ரவேசமாகிறார். இருந்தாலும் குருவின் வக்கிர கதி செப்டம்பர் 15 வரை தொடர்கிறது. பிப்ரவரி 16ல் செவ்வாயும் மகர ராசியில் சேர்ந்து கொள்கிறார். மார்ச் 31 ல் கும்ப ராசி பெயர்கிறார்.எனவே சனி+ப்ளூட்டோ+செவ்வாய் செரும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 31 காலக்கட்டத்தில் தான் நோய் அதிகம் பரவ ஆரம்பித்தது.சனி, குரு இரண்டு நீர்க்கிரகங்கள் , பூமி ராசியான மகரத்தில் இணைவது ப்ளூட்டோவின்  தாக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தும்.
இந்தியாவைப் பொறுத்தவரை மகர ராசி இந்தியாவின் 7வது ராசியாக வருவதால் கோரோனாவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றிபெறும் . மே மாதம் 11ம் தேதி சனி கிரகம் வக்கிரமடைவதால் ப்ளூட்டோவின் பாதிப்பு  தளர்வடைய ஆரம்பிக்கும். எனவே மே மாதம் இரண்டாம் வாரம் முதல் கோரோனா வைரஸ்தாக்கம் இந்தியாவில் ஓரளவு  கட்டுக்குள் வரும் ( உயிரிழப்பு விகிதம் குறையும் ) . உலக ஜாதகத்தைப் பொருத்தவரை கேது தனுர் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் இவ்வருடம் செப்டெம்பர் 23ம் தேதியிலிருந்து கொரோனா வைரஸின் தாக்கம் குறைய ஆரம்பித்து , குரு நேர் கதியில் மகரத்திற்கு நவம்பர் 3ம் வாரத்தில் வரும்போது கொரோனா முழுவதுமாக முற்றிலுமாக உலகில் இருந்து விடுபடும்.அதுவரை ‘விட்டேன் தொட்டேன்’ என்று கொரோனா நோய் உலக நாடுகளில் அங்கும் இங்கும் இருந்து மக்களுக்கு அவ்வப்போது அல்லல் ஏற்படுத்தும்.
எனவே நமது இந்திய அரசு மேற்கொள்ளும் சகல விதமான முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி இந்த விஷ நோயிலிருந்து முற்றிலும் மீள்வோம். சிகிச்சையின் படிகளான தனிமை படுத்துதல், மருத்துவம் இவற்றோடு மன உறுதியுடன் இந்த கடினமான சூழலைச் சமாளிக்க தியானம் மற்றும் இறை வழிபாடும் மேற்கொள்வோம்.